
ஆர்வம் அகாடமி சேர்மன் அவர்களின் முயற்சியில் ஐஏஎஸ் தேர்வு, தமிழ் விருப்பப் பாடம் முந்தைய தேர்வு வினாக்களின் பாடவாரியான தொகுப்பு மற்றும் வழிகாட்டி நூலினை தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையர் திருமிகு.பா.பொன்னையா ஐஏஎஸ் வெளியிட ஜிஎஸ்டி நுண்ணறிவு மற்றும் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் கே.பாலமுருகன் ஐஆர்எஸ் பெற்றுக்கொண்டார்.
ஐஏஎஸ் பணி உள்ளிட்ட இந்திய குடிமைப்பணித்தேர்வில் தமிழ் இலக்கியம் விருப்பப்பாடத்திற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் 2001 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான
24 ஆண்டுகளின் பாடவாரியான வினாக்கள் மற்றும் வழிகாட்டுதல் அடங்கிய மு.சிபிகுமரனின் நூல் தொகுப்பினை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையர் திருமிகு.பா.பொன்னையா ஐஏஎஸ் வெளியிட்டார்.
முதல் பிரதியை ஜிஎஸ்டி நுண்ணறிவு மற்றும் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர்.கே.பாலமுருகன் ஐஆர்எஸ் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பி.செந்தில் வேலவன் ஐஆர்எஸ், இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர்கள் எஸ்.சங்கர் பாண்டியராஜ், ஆர்.தமிழரசி ஆகியோர் அடுத்த பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
upsc exam tamil optional questions bank collections upto year 2024