ஹிந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி:
சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய குடிமைப் பணிகளுக்கான கட்டணமற்ற பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளன.இதற்கு (11-0-2024) முதல் விண்ணப்பிக்க துவங்கலாம் . இது குறித்து தமிழகத்தின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்தியில்:
இந்தியக் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கு வழங்கப்படும் 12 மாதகால பயிற்சியில் தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படும். வாரந்தோறும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும் திறனறி தேர்வுக்கு தேர்வர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் பிரத்யேக வகுப்புகளும் நடைபெறும். வெற்றியாளர்களின் சந்திப்பும் இப் பயிற்சியில் உண்டு.
10,12-ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்கள்
பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும் அகாடமி நுழைவுத் தேர்வின் அடிப் படையிலும் பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இளநிலை பட்டப் படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் சாதிச் சான்றிதழ் நகலையும் இணைத்து அகாடமிக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்; அல்லது aarvamiasacademy@gmail.com மின்னஞ்சல் மூலமாக ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்.
Our AARVAM IAS Academy’s news published in today Hindu Tamil on 4th page about UPSC civil services Scholarship coaching for 2025 Prelims cum Mains Exam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X