சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி ,பேராவூரணி ஶ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி ,Zha பவுண்டேசன் மற்றும் Xmold Polymers இணைந்து நடத்திய இந்திய ஆட்சிப் பணிகள் குறித்த மாபெரும் விழிப்புனர்வு முகாம் பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்கள் எழுதிய “நாளை நான் ஐஏஸ்” என்ற ஐஏஎஸ் வழிகாட்டுதல் நூலை கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சரின் செயலாளர் திரு.இராஜேந்திர சோழன் அவர்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு வழங்கினார்.

 

இது குறித்து மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் போன்ற நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது (பார்க்க இணைப்பு படங்கள்) .

இச்செய்தியில்

ஆர்வம் அகாடமி நிறுவனர் திரு. சிபிகுமரன் அவர்கள் தமிழ் மொழி தோற்றம் வளர்ச்சி தனித்தன்மை, தமிழிலக்கியம் சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை, தமிழர் பண்பாட்டு வாழ்வியல்,தமிழ் இலக்கிய உத்திகள் ,தமிழ் இலக்கிய சிறப்புகள்,நல்ல குறுந்தொகை, புறனானூற்றுரை என தமிழ் விருப்பபாட தேர்வுக்கான பல்வேறு நூல்களோடு சிவில் சர்வீஸ் பயிற்சிக்கு தேவையான பொது அறிவு தொகுப்பு, யுபிஎஸ்சி முந்தைய ஆண்டுகளுக்கான வினாக்கள் தொகுப்பு உள்ளிட்ட நூல்களையும் திரு.இராஜேந்திர சோழன் அவர்கள் வெளியிட்டார்.

மேலும் அவர் கூறும் போது திரு.சிபிகுமரன் அவர்கள் அரசு சேவையை துறந்து கடந்த 15 வருடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு மிகச்சிறந்த முறையில் உதவிசெய்து மாநில மற்றும் மத்திய அரசு பணி பெற உதவி ,வெற்றி பெற வழிகாட்டியுள்ளார்.

இவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து தமிழ் மற்றும் வரலாறு போன்றவற்றை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டி வருகிறார் . வருங்காலத்தில் நீங்கள் அனைவரும் சிவில் சர்வீஸ் பணியில் சேர தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

IAS Orientation Program at Sri Venkateshwara College of Arts and Science Peravurani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X