மரியாதைக்குரிய தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி
ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகள்: முதல்நிலைத்தேர்வுக்கான அறிமுக வகுப்புகள்
All India Civil services coaching centre சார்பாக சென்னை அடையாறு பகுதியில் இன்று 13.12.2022 நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி சார்பாக அதன் நிறுவனர் திரு. சிபிகுமரன் அவர்கள் கலந்து கொண்டு தொடக்க உரை நிகழ்த்தியதோடு மாணவர்களின் குடிமைப் பணித் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வழிகாட்டுதல் உரையையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் ,சென்னை மற்றும்
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் பயிற்சித் துறைத் தலைவர் திரு.எஸ்.இராஜேந்திரன்(Additional Director) அவர்களின் சீரிய திட்டமிடலின்படி ,அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் பேராசிரியர் முனைவர்.து.தங்கராஜன் அவர்களின் ஒருங்கிணைப்பில், மையத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் கே.ஆர்.பீர்முகமது அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
According to the guidance of the respected Chief Secretary of Tamil Nadu the
introduction classes for UPSC Civil Service Exams including IAS were arranged at Adayar in Chennai.
In this event, Chennai Aarvam IAS Academy founder Mr.Shibi kumaran participated the event and delivered the introduction speech, and answered the doubts of the students.
Various other important guests also attended the event arranged by the government all India civil services coaching program