ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் விக்னேஷ்வரன் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு வருவாய்த் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய குடிமைப் பணிகள் போன்ற போட்டித் தேர்வுகளில் சாதிப்பதனை தனது உன்னத இலக்காகக் கொண்டவர் விக்னேஷ்வரன். அதற்காக தன்னைத் தயார்படுத்துவதில் முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டவர்.

எமது எளிய வழிகாட்டுதலை பின்பற்றி தன்முனைப்போடு உழைத்தவர்.

அவரது கடும் உழைப்பினை கண் முன்னே கண்டவன் நான்.
இந்திய குடிமைப் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகிய தேர்வுகளில் நேர்முகத்தேர்வு வரை சென்று வெற்றி வாய்ப்பினை மயிரிழையில் தவற விட்டவர்.

தனது கடினமான காலத்தின் ஊடே இவ்வெற்றியினை சந்தித்துள்ளார். அவரது பெருமுயற்சிக்கான சிறுஅங்கீகாரம் என்றே இந்த வெற்றியினை நாம் கருதமுடிகிறது . முயற்சி தன் மெய்வருத்திய கூலியை இன்னும் முழுமையாக அவருக்கு வழங்கவில்லை.

அவரது முயற்சியைத் தொய்வின்றித் தொடர ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி இத்தருணத்தில் வாழ்த்துகிறது.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் மா.விக்னேஷ்வரன் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு வருவாய்த் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

உங்கள் இலட்சிய இலக்கை அடைய இன்னும் வழிகளும் வாய்ப்புகளும் இருக்கின்றன விக்னேஷ்வரன்.
உறுதியுடன் உங்கள் பயணத்தினைத் தொடருங்கள்.
வாழ்த்துகின்றோம்.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
தமது வெற்றியின் மகிழ்வை அவர் இன்று(09.07.2024) பகிர்ந்து கொண்டபோது.

AARVAM IAS ACADEMY student M.Vigneshwaran cleared the TNPSC Group 2 exam and successfully got Direct Assistant in Revenue Department in Chengalpattu district

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact