இந்திய குடிமைப் பணிகள் போன்ற
போட்டித் தேர்வுகளில் சாதிப்பதனை தனது உன்னத இலக்காகக் கொண்டவர் மைதிலிப்பிரியா.
அதற்காக தன்னைத் தயார்படுத்துவதில் முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டவர். போட்டித்தேர்வின் முடிவுகள் சில நேரங்களில் கடும் முயற்சியாளர்களுக்கு கூட பின்னடைவை வழங்கும் விநோதம் கொண்டது.
இப்பின்னடைவு தரும் வலியை விட சமூகம் ஏற்படுத்தும் காயத்திலிருந்து மீள்வதே வாழ்வின் ஆகப்பெரும் சவாலாக இருக்கும். காலம்தான் இதற்கான மீட்சியை வழங்கி முயற்சிக்கான அங்கீகரிப்பை உறுதி செய்யும்.
அது போன்றதொரு அங்கீகரிப்பை மைதிலிப்பிரியா தனது கடினமான காலத்தின் ஊடே இவ்வெற்றியின் மூலம் சந்தித்துள்ளார். அவரது முயற்சிக்கான முதல் அங்கீகாரம் இந்த வெற்றி.
நம் கவனத்திற்கு வராத மைதிலிப்பிரியாக்கள் நிறைய இருக்கின்றார்கள்.
அவர்களையும் சேர்த்து அவர்களது முயற்சியைத் தொய்வின்றித் தொடர ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி இத்தருணத்தில் வாழ்த்துகிறது.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி ஆர்.மைதிலிப்பிரியா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாடு காவல் துறையில் அமைச்சுப்பணியில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற உங்களின் இலட்சிய இலக்கு உங்களுக்கு மிகவும் அருகாமையில் வந்துவிட்டது மைதிலிப்பிரியா.
உறுதியுடன் உங்கள் பயணத்தினைத் தொடருங்கள்.
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
தமது வெற்றியின் மகிழ்வை அவர் தனது சகோதரி ஜனனியுடன் வந்து பகிர்ந்து கொண்டபோது.
S Mythili Priya student of aarvam ias academy successfully cleared the tnpsc group 2 exams got an Direct Assistant in Police Department