ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.தனகோபால் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வு எழுதிடத் தொடங்கியது முதல் இன்று வரை எமது எளிய வழிகாட்டுதலை பின்பற்றி கடும் முயற்சி மேற்கொண்டு வருபவர் ஆர்.தனகோபால்.
போட்டித் தேர்வுக்கான அர்ப்பணிப்பு மிக்க உங்கள் பயணத்தில் இந்த வெற்றி ஒரு இளைப்பாறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
உங்களது இலக்கு நோக்கிய பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை தனகோபால். இன்னும் உங்கள் பயணம் இலட்சிய இலக்கு நோக்கி தொடரட்டும்.இன்னும் உயர்ந்த வெற்றிகளை நீங்கள் அடைவீர்கள்.
வாழ்த்துகின்றோம்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.
இன்று (25.05.2024)தமது தந்தையார் இரெங்கராஜ் கோபாலன் அவர்களோடு வந்து வெற்றியின் மகிழ்வை பகிர்ந்து கொண்டபோது.
R Dhanagopal student of aarvam ias academy successfully cleared the tnpsc group 2 exams got an Direct Assistant Rural Development Department