ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமியில் இந்தியக் குடிமைப்பணித்தேர்வுக்குத் தயராகும் தேர்வர்களுக்கு திரு. எம்.பொன்னியின் செல்வன் ஐ.ஐ.எஸ்,கலந்துகொண்டு வழிகாட்டுதல் பயிற்சி வழங்கினார்.இந்நிகழ்வு குறித்து மக்கள் குரல் நாளிதழில் வெளிவந்த செய்தி.
ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் இந்தியக் குரமைப் பணி மாதிரித் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியத் தகவல் பணி அதிகாரி பொன்னியின் செல்வன் பரிசு வழங்கி பாராட்டு
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வருகின்ற ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமியில் இந்தியக் குடிமைப்பணித்தேர்வுக்குத் தயராகும் தேர்வர்களுக்கு இந்தியத் தகவல் பணிஅதிகாரியும், துணை இயக்குநரும்,இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தமிழ்நாடு மக்கள் தொடர்பு அதிகாரியுமான எம்.பொன்னியின் செல்வன் ஐ.ஐ.எஸ்,கலந்துகொண்டு மாதிரித்தேர்வுகளில்.
முதலிடம் பெற்ற தேர்வர்களுக்கு பரிசுகள் வழங்கி வழிகாட்டிப் பேசினார்.
அவர் பேசியதாவது,தமிழ்நாட்டில் இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நல்ல விழிப்புணர்வு உள்ளது. இது நல்ல மாற்றம். நாட்டின் உயர்ந்த அரசுப்பணியாக விளங்குவது இந்தியக்குடிமைப்பணியாகும்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகள் இவற்றில் அடங்குகின்றன.சமீபத்தில் இந்திய ரயில்வே பணிகளை ஒருங்கிணைத்து இந்திய ரயில்வே மேலாண்மைப் பணிகள் என உருவாக்கபட்டிருக்கின்றது. இந்த ஆண்டிற்கான குடிமைப்பணிகளின் காலிப்பணியிடங்கள். 1100க்கும் அதிகமானதாக உள்ளன.
மே 23 முதன்மை தேர்வு இதற்கான முதன்மைத் தேர்வு வருகின்ற மே 28ஆம் தேதி நடைபெறுகின்றது. அதற்காக நீங்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். மூன்று
கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில் நீங்கள் சிறந்த வெற்றியினை ஈட்டிட
எனது வாழ்த்துகள்.
பொதுவாக இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்த வரையில் தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் திட்டமிடல் என்பது ஒவ்வொரு தேர்வருக்கும் வேறுபடும் அதனால்தான் வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் என்பது ஒரே விதமாக அமைவதில்லை.
ஆனாலும் இத்தேர்வுக்கான தயாரிப்புகளில் சிலகூறுகள் எப்போதும் அடிப்படையானவை. அன்றாட
நாளிதழ்களை தேர்வு நோக்கில் ஆழ்ந்து படித்தல், குறிப்புகளை எடுத்தல்,எழுதுதல், பாடத்திட்டத்தோடு அக்குறிப்புகளை ஒப்பிட்டு அதற்கான அடிப்படையான பாடங்களையும்
படித்தல், பூகோள வரைபடத்தில் தொடர்புடைய அடையாளம் காணுதல் போன்றவை
இடங்களை தேர்வுக்கான தயாரிப்புகளில் அனைவருக்கும் பொதுவானவை,அடிப்படையானவை ஆகும்.
புதிய தேர்வர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துக் கின்றபோது கவனத்துடன் கையாள வேண்டும். வாசிப்பு வழக்கத்தினை அதிகப்படுத்தும் போதுதான் உங்களது இலட்சிய வெற்றிக்கான சாத்தியங்கள் தெளிவாகின்றன. அதனால் குடிமைப்பணித் தேர்வுக்கான ஆதார
நூல்களைப் படிக்கின்ற வழக்கத்தினை தீவிரப்படுத்துங்கள்.
பயிற்சி கட்டாயம்
ஒவ்வொரு நாளும் தேர்வர்களராகிய நீங்கள். உங்களுடைய திட்டமிடலின்படி அன்றைய பாடங்களைப் படிக்கத் தொடங்குமுன் குறைந்த பட்சம் 50 முதல் நிலைத்தேர்வுக்கான முந்தையதேர்வு வினாக்களை பதிலளித்து பயிற்சி செய்யுங்கள். 2 முதன்மைத் தேர்வு
வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி செய்யுங்கள். இதனைத் தவறாது உங்கள்.
பயிற்சியின் இிட்டங்களுள் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்திய குடிமைப்பணித்தேர்வுகளை எழுதத் தொடங்கிய போது நான் தமிழ்நாடு அரசுப்பணியாளர்.
தேர்வாணையத்தேர்வுகளையும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளையும் எழுதினேன். சில பின்னடைவுகளுக்குப் பிறகு மேலே குறிப்பிட்ட அனைத்துப் பணியாளர்.
தேர்வாணையத் தேர்வுகளிலும் வென்று பணிவாய்ப்பினைப் பெற்றேன். தொடர் முயற்சியும் வழிகாட்டுதலும் நல்ல நட்பு வட்டமுமே எனது வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தன.
Mr.Ponnien Selvan IIS,Deputy Director and Tamilnadu PRO for Indian Defence Ministry, Speech for AARVAM IAS Academy’ aspirants of Civil services exam 2023 and news published in Makkal Kural Daily
எனது அப்பா, அம்மா, சகோதரி ஆகியோர் ஆதரவாக இருந்தார்கள் எனது நம்பிக்கை சற்று குறைந்த
போதெல்லாம் பல்வேறு வகைகளில் உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்தவர் சிபிகுமரன் ஆவார்.
தன்னிடம் வருகின்ற தேர்வர்களுக்கு சிபிகுமரன் அணுகுவதற்கு எளிதான ஒரு சிறந்த வழிகாட்டியாக மட்டுமல்லாது நல்ல நண்பராக,வெற்றிக்கான உந்து சக்தியாக விளங்கி தேர்வர்கள் இலட்சிய வெற்றியினை ஈட்டுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றுபவர்.
இந்திய குடிமைப்பணித் தேர்விலும், மத்தியப்பணியாளர் தேர்வாணையத் தேர்விலும், தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்விலும் எண்ணற்ற வெற்றியாளர்களை தனது சிறப்பான வழிகாட்டுதல் மூலம் உருவாக்கியவர். நானே அதற்கான வெற்றிகரமான எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இந்தியக்குடிமைப் பணித்தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் தனக்கென்ற ஒரு தனித்துவம் மிக்க அணுகுமுறையை வைத்துக்கொண்டு தமிழ் மற்றும் வரலாற்று விருப்பப்
பாடம், முதன்மைத் தேர்வின் பொதுஅறிவுப் பாடங்கள் ஆகியவற்றில் இறந்த மதிப்பெண்களை தேர்வர்கள் ஈட்டுவதற்கு தக்க முறையில் சிபிகுமரன் வழிகாட்டி வருகிறார்.
ஒரு குருகுலம் போன்ற உணர்வோடு உங்கள் தயாரிப்புகளை மேற்கொண்டு இறந்த வெற்றியாளர்களாக நீங்கள் உருவாகி இந்த நாட்டிற்கு சேவையாற்ற இந்த இடம் உங்களுக்கு நிச்சயம் உதவும். அதனால் சரியான இடத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களது உயர்ந்த இலட்சிய வெற்றிக்கு எனது வாழ்த்துகள். நிகழ்ச்சியை ஆர்வம்
அகாதமியின் குடிமைப்பணித்தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நந்தக்குமார், முதல்நிலை பயிற்சியாளர் நவின், டி.என்.பி.எஸ்.சி பயிற்சி ஒருங்கிணைப்பாளர். சரவணன் ஆகியோர் ஒருங்கணைத்தனர்.எண்ணற்ற மாணவ மாணவியர் பங்கு.
பெற்றனர்.