நாளிதழ் செய்தி: பள்ளிக்கல்‌வித்துறையின்‌ இணைச்செயலாளர் திரு.மணிகண்டன் IAS அவர்கள் உரை

ஆர்வம் ஐஏஸ் அகாடமியின் IAS GS MAINS தலைப்பு வாரியான வினாக்கள் தொகுப்பு மரியாதைகுரிய பள்ளிக்கல்‌வித்துறையின்‌
இணைச்செயலாளர்‌ டாக்டர் திரு.மணிகண்டன் IAS அவர்களால் சில நாட்கள் முன்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு குறித்தும் இந்நிகழ்வில் அவர் மாணவ மாணவியர் ஆற்றிய வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வு குறித்து 14-ஜனவரி-2023 அன்று நாளிதழில் வெளியான செய்தி.

News paper coverage of Dr.Manikandan IAS Joint secretary School Education speech among Aarvam IAS Academy students

News paper coverage of Dr.Manikandan IAS Joint secretary School Education speech among Aarvam IAS Academy students

எம்.சிபி.குமரனின்‌ ஆர்வம்‌ ஐ.ஏ.எஸ்‌’ அகாடமி நிகழ்ச்சி
“தீராத தேடல்‌, குன்றாத ஆர்வம்‌, தளராத நம்பிக்கை
ஐ.ஏ.எஸ்‌ தேர்வு வெற்றிக்கு அடிப்படை”

சென்னை அண்ணா நகரில்‌:
செயல்பட்டு வருகின்ற ஆர்வம்‌
ஐ.ஏ.எஸ்‌. அகாடமியில்‌ தமிழ்நாடு.
பள்ளிக்கல்‌வித்துறையின்‌
இணைச்செயலாளர்‌ டாக்டர்‌
டி.மணிகண்டன்‌ கலந்து கொண்டு.
இந்தியக்‌ குடிமைப்பணித்‌
தேர்வர்களுக்கு. வழிகாட்டிப்‌:
பேசினார்‌.

அப்போது அவர்‌, தீராத தேடலும்‌,
குன்றாத ஆர்வமும்‌, தளராத
நம்பிக்கையும்‌ ஐ.ஏ.எஸ்‌ தேர்வின்‌
வெற்றிக்கான அடிப்படை என்று.
அறிவுறுத்தினார்‌.

இந்தியக்‌ குடிமைப்பணித்தேர்வு
எழுதி வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்‌,
ஐ.பி.எஸ்‌, ஐ.ஆர்‌.எஸ்‌ போன்ற
பணிகளைப்‌ பெறவேண்டும்‌
என்ற ஆவல்‌ தமிழ்நாட்டு படித்த
இளைஞர்களிடம்‌ பெருகி வருவது
மகிழ்வினைத்‌ தரும்‌ செய்தியாகும்‌.
ஆண்டுதோறும்‌ இந்தியக்‌ குடிமைப்‌
பணித்‌ தேர்வுகளில்‌ பங்கு பெறுகின்ற
தமிழ்நாட்டுத்‌. தேர்வர்களின்‌
எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து
கொண்டே வருகின்றது.
அதேவேளையில்‌ கடந்த சல
ஆண்டுகளாக தமிழ்நாட்டின்‌ வெற்றி:
விதம்‌ மற்றும்‌ வெற்றியாளர்களின்‌
எண்ணிக்கை குறைந்து வருவதும்‌:
கவலை. அளிக்கக்‌ கூடியதாக
இருக்கின்றது. அதனைத்‌ தேர்வர்கள்‌
கவனத்தில்‌ எடுத்துக்‌ கொண்டு.
தயாரிப்பு உத்திகளை இன்றைய
வினாத்தாள்‌ கட்டமைப்புக்கு ஏற்ற
வகையில்‌ மாற்றிக்‌ கொண்டால்‌.
சாதனை வெற்றியை ஈட்டலாம்‌ என்று.
அவர்‌ கூறினார்‌.
தொடர்ந்து அவர்‌
கூறியதாவது:-
ஆங்கில நாளிதழ்களை தொடர்ந்து
ஆழ்ந்து படிப்பதும்‌, குறிப்புகள்‌
எடுத்துக்கொள்வதும்‌ அதன்‌ வழியே
பாடப்புத்தகங்களின்‌ பாடங்களைப்‌
படிப்பதும்‌, பாடத்திட்டத்தோடு
பொருத்தி ஒப்பீடு செய்து தேர்வுக்கான
குறிப்பேடுகளைத்‌ தேர்வர்களே தயார்‌
செய்வதும்‌ தேர்வர்களின்‌ ஆளுமைத்‌

பேசுகையில்‌

‘இறனையும்‌, மொழித்‌ இறனையும்‌
வளர்த்துக்‌ கொள்ள உதவும்‌. இதனால்‌
லட்சிய வெற்றியை அடைவதும்‌
எளிதாகும்‌.

தங்களின்‌ நேரத்தினை
தேர்வுக்குப்‌ பயனுள்ள முறையில்‌:
பயன்படுத்த விரும்பினால்‌:

இணையத்தளங்களிலும்‌,
கைபேசிகளிலும்‌ தேர்வர்கள்‌ மூழ்கி

பள்ளிக்கல்வித்துறை இணைச்செயலாளர்‌
டய பப யமி)

விடக்கூடாது. பாடங்கள்‌ தொடர்பான

ஆரோக்கியமான குழுவிவாதம்‌
முந்தைய தேர்வு வினாக்களுக்கான
கொள்குறிவகை மற்றும்‌

எழுத்துத்தேர்வுக்கான தொடர்பயிற்சி
போன்றவற்றை இட்டமிட்டு
மேற்கொள்ளவேண்டும்‌.
‘இதுபோன்ற இட்டமிட்ட
பயிற்சிகளின்‌ மூலமே தேர்வர்களின்‌
இலக்கை அடையும்‌ நோக்கம்‌
சாத்தியமாகும்‌. இந்தியக்‌ குடிமைப்‌
பணித்‌ தேர்வு என்பது நாட்டின்‌
உயரிய அரசுப்பணிக்கான தேர்வு
என்பதனையும்‌, நாடு தழுவிய
போட்டித்‌ தேர்வு” என்பதனையும்‌
கவனத்தில்‌ கொண்டு தமிழ்நாட்டுத்‌
தேர்வர்கள்‌ தங்களது தயாரிப்புகளை
மேற்கொள்ள வேண்டும்‌.
அறிவுப்பூர்வ தகவல்கள்‌
நேர்முகத்‌ தேர்வினைப்‌
பொறுத்தவரையில்‌: இந்தியக்‌
குடிமைப்‌ பணிகள்‌ தேர்வாணையம்‌
தமிழ்நாட்டுத்‌ தேர்வர்களிடம்‌
நிறைய அறிவுப்பூர்வமான
தகவல்களை எதிர்பார்ப்பதனை
மனதின்‌ கொண்டு தேர்வர்கள்‌ பதில்‌
கூறுகின்ற விதத்திலும்‌, எந்தவொரு

நிகழ்வையும்‌. அறிவுப்பூர்வமான
தொலைநோக்குச்‌ சிந்தனையோடு
உள்வாங்கி வெளிப்படுத்துஇின்ற

விதத்திலும்‌ தங்களை மேம்படுத்திக்‌
கொள்ளவேண்டும்‌.

எனவே, தீராத தேடலும்‌ குன்றாத
ஆர்வமும்‌ தளராத நம்பிக்கையும்‌
ஐ.ஏ.எஸ்‌. தேர்வின்‌ வெற்றிக்கான
அடிப்படை என்பதனை உணர்ந்து:
தேர்வர்கள்‌ கவனத்துடனும்‌,
அர்ப்பணிப்பு உணர்வோடும்‌
தேர்வுக்குத்‌ தயாராதல்‌ வேண்டும்‌.

்‌ கவு

தமிழ்நாட்டில்‌ மு. சிபிகுமரன்‌
சேவை நோக்கோடும்‌, தமிழ்நாட்டுத்‌
தேர்வர்களின்‌ வெற்றியில்‌ அக்கறை
கொண்டும்‌. தொடர்‌;
முறையில்‌ வழிகாட்டி
வெற்றியாளர்களை

வருகின்றார்‌. தமிழ்வழியில்‌ இந்தியக்‌

குடிமைப்பணித்‌ தேர்வுகளை எழுதி
வருகின்ற தேர்வர்களுக்கும்‌, தமிழ்‌
‘இலக்கியத்தினையும்‌, இந்திய
வரலாற்றையும்‌ விருப்ப பாடமாக
எடுக்கின்ற. தேர்வர்களுக்கும்‌
நம்பகமான வெற்றிகரமான
வழிகாட்டியாக விளங்கி வருகின்றார்‌.
அவரது அனுபவுத்தினை
தேர்வர்களான நீங்கள்‌ நன்கு
பயன்படுத்திக்‌ கொண்டு சாதனை

வெற்றி பெற வாழ்த்துகின்றேன்‌.
பாடவாரியான தொகுப்பு

நிகழ்வில்‌ இந்தியக்‌
குடிமைப்பணிகள்‌, பொது
அறிவுப்பாடம்‌ முதன்மைத்‌
தேர்வுக்கான முந்தைய தேர்வு
வினாக்களின்‌ பாடவாரியான.
மு.சிபிகுமரனின்‌ தொகுப்பினை

டாக்டர்‌.டி.மணிகண்டன்‌ ஐ.ஏ.எஸ்‌.
வெளியிட்டு தேர்வர்களுக்கும்‌
வழங்கினார்‌.

நிகழ்வினை ஆர்வம்‌ ஐ.ஏ.எஸ்‌.
அகாடமியின்‌ ‘இந்தியக்‌
குடிமைப்பணிகள்‌ தேர்வுக்கான.
ஒருங்கிணைப்பாளர்‌ எம்‌.நந்தக்குமார்‌,

டி.என்‌.பி.எஸ்‌.ஸி பணிகள்‌.
தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்‌
ஏ.சரவணன்‌, நிர்வாக அலுவலர்‌.
மூ.சிந்தியா பாலா ஆகியோர்‌
ஒருங்கிணைத்தனர்‌. நூற்றுக்கும்‌
மேற்பட்ட தேர்வர்கள்‌ கலந்து

கொண்டு பயனடைந்தனர்‌.

News paper coverage of Dr.Manikandan IAS Joint secretary School Education speech among Aarvam IAS Academy students

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart