சென்னை ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அடுத்த 2024ஆம் ஆண்டுக்கான (2024) இந்தியக்
குடிமைப்பணித் தேர்வுகளின்
முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை ் ஜிஎஸ்டி துணை ஆணையர் டி. கெளரி சங்கர் ஐஆர்எஸ் துவங்கி வைத்தார்.
கடந்த 4ம் தேதி 04.06.2023 நடந்தது.
இதுகுறித்து மக்கள் குரல் நாளிதழில் செய்தி நேற்று வெளியாகி இருந்தது.
செய்தி தாளில் உள்ள செய்தி(எழுத்து வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) .
விருப்பத்தோடும் ஈடுபாட்டோடும் படித்தால்
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி நிச்சயம்
ஜிஎஸ்டி துணை ஆணையர் டி. கெளரி சங்கர் அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 1௦-அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அடுத்த 2024ஆம் ஆண்டுக்கான (2024) இந்தியக்
குடிமைப்பணித் தேர்வுகளின்.
முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் வருவாய்
புலனாய்வு இயக்குநரகத்தின்துணை ஆணையர் டி. கெளரி சங்கர். இந்திய குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களோடு அவர்.
கலந்துரையாடி வழிகாட்டிப் பேசினார்.
இந்தியக் குடிமைப்பணி தேர்வுகளை எழுதுவது ஒரு சிறந்தமுயற்சி மட்டுமல்ல லட்சிய இலக்குமாகும்.
குடிமைப்பணித் தேர்வுகளின் வினாக்கள் கட்டமைப்பு ஆண்டுதோறும் புதுமையாக மாறி
வருவது இயல்பான ஒன்றே. அதனால் குடிமைப்பணித் தேர்வுக்கான தயாரிப்பிலும், வெற்றியிலும் முந்தைய தேர்வு வினாக்கள் பற்றிய தெளிவான பார்வை அவசியம்.
பொது அறிவுப்பாடங்களை உள்வாங்குவதற்கும்,
நாளிதழ்களில் நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிப்பதற்கும் முந்தைய தேர்வு வினாக்கள் பெரிதும் வழிகாட்டுகின்ற காரணிகளாக விளங்குகின்றன என்றார் அவர்.தொடர்ந்து அவர் பேசியதாவது:-
அதனால் இணைய தளங்களில் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகளைத் தேர்வர்கள் படிப்புதனைத் தவிர்த்து நாளிதழ்களில் நேரடியாகப் படித்து குறிப்புகளை எடுக்கின்ற
வழக்கத்தினை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நடப்பு நிகழ்வுகளே முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வின் வினாக்களுக்கு பெரிதும் அடிப்படையாய் அமைகின்றன.
எழுத்துத் தேர்வுக்கான ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடைகளை எழுதிப்பார்ப்பதும் அன்றாட தயாரிப்புகளின் முக்கியக் கூறாக
தேர்வர்கள் அமைத்துக் கொள்ள
வேண்டும்.
குடிமைப்பணித்தேர்வு என்பது உங்களால் சாதிக்க முடிந்த தேர்வே.
ஆண்டுதோறும் 10௦0க்கும் மேற்பட்ட
பணியிடங்கள் நிரப்பப்படுவதால் உங்களுக்கான சாதிக்கும் வாய்ப்புகள்
பிரகாசமாக இருக்கின்றன. அதனால்
நம்பிக்கை கொண்டு படித்தல் வேண்டும்.
தேர்வின் வெற்றிக்கு சரியான பாடப்புத்தகங்களை தேர்வு செய்வதும், சரியான வழிகாட்டுதலைப் பெறுதலும் அவசியமானதாகும். தெளிவான திட்மிடுதலுடன் நேரத்தினை பயனுள்ள முறையில் பயன்படுத்துதல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உங்களுடைய பாடங்களை சரியான இட்டமிடலின்படி காலம் தாழ்த்தாமல்
படித்தல் வேண்டும். இதன் மூலம் உங்களின் வெற்றி விரைவில் உறுதி செய்யப்படும்.
விருப்பப் பாடத்தின் அடிப்படையில் விருப்பப்பாடத் தேர்வு என்பது தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், அப்பாடத்தின்
மீதான ஈடுபாட்டின் அடிப்படையிலும் தேர்வு செய்தல் வேண்டும். ஏதோ ஒரு பாடத்தில் அந்த ஆண்டில் ஒருவர் சிறந்த வெற்றியைப் பெற்று விட்டார் என்பதற்காக ஏனைய தேர்வர்களும்
அவ்விருப்பப் பாடத்தினைத் தேர்வு செய்வதோ அல்லது ஏற்கனவே தேர்வு செய்த விருப்பப் பாடத்தினை மாற்றுவதோ சரியான அணுகுமுறை ஆகாது. அத்தகைய
மமவ பெரும்பாலம் வெற்றியை தருவதில்லை.
நான் தமிழை விருப்பப்பாடமாக விருப்பத்தின் அடிப்படையில் எடுத்தேன். விரும்பி ஈடுபாட்டோடு படித்தேன். நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெற்றேன். அந்த வகையில் தமிழ்நாட்டினைப் பொறுத்த வரையில்
கடந்தகாலங்களில் அதிகமான வெற்றியாளர்களை உருவாக்கியதில்
தமிழ் விருப்பப் பாடத்திற்கு பெரும் பங்கு உண்டு. ஆகவே, தமிழ் ஒரு வெற்றிகரமான விருப்பப் பாடமாகும்.
தமிழ்நாட்டில் தேர்வர்களின் வெற்றியைக் கருத்தில் கொண்டு அதக மதிப்பெண்களைப் பெற ஏற்ற வகையில் தேர்வின் எதிர்பார்ப்புகளை
உள்வாங்கிக் கொண்டு, எளிமையாக அணுகுவதற்கு ஏற்ற வெற்றிகரமான வழிகாட்டியாக மு.சிபிகுமரன் திகழ்கிறார். அவரது நேர்த்தியான வழிகாட்டுதல் எண்ணற்ற
வெற்றியாளர்களை தமிழ்நாட்டிற்குத்
தந்துள்ளது. உங்களது வெற்றிக்கும் அவரது வழிகாட்டுதல் பெரிதும் துணை நிற்கும். வெற்றிக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Mr.D.Gowrisankar IRS,Deputy commissioner, Directorate of Revenue Intelligence, Speech for AARVAM IAS Academy’s aspirants of Civil services Mains cum Prelims batch 2024 and news published in Makkal Kural Daily.