
தினமணி நாளிதழ் செய்தி:
ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுக்கு கட்டணச் சலுகையுடன் பயிற்சி இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுக்கு (யுபிஎஸ்சி) பெண்கள் மற்றும் தமிழ் வழியில் பயின்றோருக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் கட்டணச் சலுகையுடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட ‘செய்திக் குறிப்பு:
இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் ஒரு ஆண்டு கட்டணச் சலுகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் அடிப்படை பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படும். வாரந்தோறும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப்புகளும், வழிகாட்டுதல் சந்திப்பும் நடத்தப்படும்.
இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், அகாதெமி யின் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
இந்த நுழைவுத் தேர்வுக்கு 27 வயதுக்குள்பட்ட, தகுதியும் விரும்ப மும் உள்ள பெண்கள் மற்றும் தமிழ் வழியில் பயின்றோர் சென்னை அண்ணா நகர், 12-ஆவது பிரதானச் சாலையில் செயல்படும் ஆர் வம் ஐஏஎஸ் அகாதெமியில் நேரடியாகவும், aarvamiasacdemy@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகவும் மே 13- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 74488 14441, 96771 00179 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்து நாளிதழ் செய்தி (கீழே)

speical fees concession for women tamil optional student s of upsc ias coaching from aarvam ias academy -article by Dinamani and Tamil Hindu newspapers