ஆர்வம்‌ அகாடமியில்‌ ஐஏஎஸ்‌ தேர்வு- தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தும் வருமான வரித்துறை இணை ஆணையர் சங்கர் கருப்பையா உரை

இது குறித்து மக்கள் குரல் நாளிதழில் வெளியான செய்தி:

Makkal Kural daily news paper coverage of respected shankar karuppaiah income tax assistant commissioner
Makkal Kural daily news paper coverage of respected shankar karuppaiah income tax assistant commissioner

அண்ணாநகரில்‌: செயல்பட்டுவரும்‌ ஆர்வம்‌ ஐஏஎஸ்‌ அகாடமியில்‌
குடிமைப்பணி தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் நடைபெற்றது.

வருமானவரித்துறை இணை ஆணையரும்‌, “இந்திய
பொருளாதாரம்‌! என்ற நூலின்‌ ஆசிரியருமான சங்கர்கணேஷ்‌
கருப்பையா கொண்டு தேர்வர்களுக்கு. வழிகாட்டிப்‌
பேசினார்‌.
அப்போது அவர்‌ பேசுகையில்‌ கூறியதாவது:- “முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மைத்‌தேர்வு, நேர்முகத்தேர்வு என அடுத்தடுத்த நிலைக்குத்‌ தயாராககிக்கொண்டே இருக்க வேண்டும்

முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாவிட்டாலும்‌ முதன்மைத்‌
தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்ள
வேண்டும்‌.

பட்டப்படிப்பை தேர்வு செய்வதில்‌ குழப்பம்‌ தேவையில்லை. ஏதேனும்‌ ஒரு விருப்பமான பட்டப்படிப்பை
எடுத்துப்‌ படிக்கலாம்‌. குடிமைப்‌பணித்‌ தேர்வுக்காக சிறப்பான
பட்டப்படிப்பு என்று எதுவுமில்லை.

‘இனந்தோறும்‌ நாளிதழ்களைப்‌ படித்து குறிப்பெடுக்கும்‌ வழக்கதை வளர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.
ஆதார நூல்களையும்‌ ஆழ்ந்து
படித்து குறிப்பு எடுக்க வேண்டும்‌.

குறிப்பு எடுக்கும்போது மீண்டும்‌ படித்தால்‌ புரியும்படி தெளிவாக எழுத வேண்டும்‌.

எந்தவொரு பகுதிக்கும்‌ அல்லது பாடத்திட்டத்துக்கும்‌ 2 ஆதார
நூல்களுக்கு மேல்‌ படிக்கவேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக,பண்டைக்கால இந்தியாவுக்கு ஆர்‌.
எஸ்‌. சர்மாவின்‌ நூலைப்‌ படித்தால்‌, கூடுதலாக மற்றொரு நூலிலிருந்து எடுத்த குறிப்புகளோ அல்லது
வகுப்பில்‌ எடுத்த குறிப்புகளோ போதுமானது.

ஏனென்றால்‌ மறுதிருப்புதல்‌ என்பது தேர்வின்‌
வெற்றிக்கு மிகவும்‌ முக்கியமானது.குறிப்புகள்‌ எளிமையாக புரிதலுக்கு ஏற்ற வகையில்‌ அமைய வேண்டும்‌.

“நாளிதழ்களை படிக்கும்போது அட்லஸ்‌ என்னும்‌ உலக வரைப்பட நூலை அவசியம்‌ அருகில்‌ வைத்து தேவையான புவியியல்‌ அமைப்புகளை, இடங்களை அடையாளம்‌ காண வேண்டும்‌.

குறிப்புகளை எடுப்பது எவ்வளவு முக்கியமோ அத்தனை முக்கியமானது அக்குறிப்புகளை பாடத்திட்டத்தோடு
தொடர்புப்‌படுத்தி படிப்பதாகும்‌.

அதேபோல்‌. அக்குறிப்புகளை முதல்நிலை, முதன்மைத்‌ தேர்வின்‌ முந்தைய தேர்வு வினாக்களோடு தொடர்பு. படுத்தி அதன்‌ அடிப்படையில்‌ படிப்பதும்‌, தேர்வின்‌
வெற்றிக்கு அவசியமானது.

தேர்வு நேரத்தில்‌ இட்டமிட்டுப்‌ படிக்க அட்டவணை உருவாக்குவது முக்கியம்‌. அதன்படி படித்தால்‌
வெற்றியை உறுதி படுத்தலாம்‌.

முதல்நிலை தேர்வுக்கு 25 ஆண்டு முந்தைய தேர்வு வினாக்களை 3 நிலையில்‌ வகைப்படுத்தி ஆழ்ந்த
புரிதலோடு படித்தல்‌ முதல்நிலைத்‌ தேர்வின்‌ வெற்றியை சாத்தியமாக்கும்‌.

விருப்பப்பாடத்தை பொறுத்த அளவில்‌ அதிக மதிப்பெண்கள்‌
பெறுவதற்கு வழிகாட்டலும்‌, ஆதார நூல்களைத்‌ தேர்வு செய்வதும்‌, விடை கட்டமைப்பும்‌, வாக்க அமைப்பும்‌
முக்கிய பங்கு ஆற்றுகின்றன.

சிபிகுமரனை பொறுத்தவரை வெற்றி பெற முடியாது என்று
நினைத்த சிலரை வெற்றி பெற வைத்து என்னை ஆச்சரியப்படுத்தியவர்‌.

அத்தகைய வழிகாட்டுதல்‌ அரிதானது. தமிழ்‌ விருப்பப்பாடம்‌,
தமிழ்‌ வழியில்‌ தேர்வு எழுதுதல்‌,பொது அறிவில்‌ அறதெறி போன்ற பாடங்களில்‌ தேர்வர்களை சிறந்த
மதிப்பெண்களை எடுக்க வைக்க,பல வெற்றியாளர்களை உருவாக்கி சிபிகுமரன்‌ சிறந்த வழிகாட்டியாகத்‌
இிகழ்கிறார்‌. தமிழ்நாட்டில்‌ இருந்து வரும்‌ காலங்களில்‌ குடிமைப்‌ பணித்‌தேர்வுக்கு எண்ணற்ற வெற்றியாளர்கள்‌
வருவதற்கு திட்டமிட்ட கற்றலும்‌ செயலும்‌ தேவை.

எளிய பின்புலத்தில்‌ இருந்து வரும்‌ தேர்வர்கள்‌ கூட தொடர்‌ பயிற்சியை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு
முயற்சி செய்தால்‌ தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தும்‌ வகையில்‌ ஐஏஎஸ்‌ தேர்வில்‌ வெற்றி பெற்று.
சாதனை படைக்க இயலும்‌ என்றார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மு.சிபிகுமரனின்‌ இந்தியக்குடிமைப்‌ பணி முதன்மைத்‌ தேர்வுக்கான பாட வாரியான
மேம்படுத்தப்பட்ட தொகுப்பை முனைவர்‌ சங்கர்கணேஷ்‌ கருப்பையா வெளியிட்டு வந்திருந்த 100க்கும்‌
மேற்பட்ட தேர்வர்களுக்கு வழங்கினார்‌.

ஆர்வம்‌ ஐஏஎஸ்‌ அகாடமியின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ கவுதம்‌.
விஸ்வபாரதி, இணை ஒருங்கிணைப்பாளர்‌. சத்யா,
முதன்மைப்‌ பயிற்சியாளர்கள்‌ எம்‌.நந்தகுமார்‌, டி.கார்த்திக்‌, ஏ.சரணவன்‌
ஆகியோர்‌ ஒருங்குணைத்தனர்‌..

Makkal Kural daily news paper coverage of respected shankar karuppaiah income tax assistant commissioner .

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart